கூடலூரில்அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்

கூடலூரில் அதிவேக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.;

Update:2023-03-25 00:15 IST

திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேனி மாவட்டம் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏராளமான கூலித்தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள ஏலக்காய்த் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோல் குமுளிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு அசுர வேகத்தில் வந்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் இழக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் கூடலூர் வழியாக செல்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே அதிக வேகத்தில் இயக்கப்படும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்