கூடலூரில்கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு

கூடலூரில், கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-03-23 18:45 GMT

கூடலூர் நகர பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி குடிநீர் மெயின் குழாயில் உடைப்புகள் ஏற்பட்டு அதனை சீரமைப்பு செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.

இதனால் கூடலூருக்கு மட்டும் தனியாக குடிநீர் திட்டத்தை நகராட்சியிடம் ஒப்படைப்பு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 3.15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு கூடலூர் நகர பகுதி மக்களுக்கு மட்டும் தனியாக குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை கூடலூர் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்காக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரவணன், மண்டல பொறியாளர் மனோகரன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆணையர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் நேற்று லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்