அரசு கள்ளர் பள்ளியில்அம்பேத்கர் பிறந்தநாள் விழா
தேனி அருேக அரசு கள்ளர் பள்ளியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடந்தது.;
தேனி அருகே வாழையாத்துப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை வசந்தவள்ளி தலைமை தாங்கினார். விழாவில் அம்பேத்கர் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் குறித்து ஆசிரியர் கருப்பசாமி பேசினார். மேலும் அவர், அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் பாரதி, கவுரி மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.