அரசு தொடக்கப்பள்ளிகளில்எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும்-இல்லம் தேடி கல்வி கூட்டத்தில் தீர்மானம்

அரசு தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று இல்லம் தேடி கல்வி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-30 18:45 GMT

ஆனைமலை

அரசு தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று இல்லம் தேடி கல்வி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆய்வு கூட்டம்

ஆனைமலை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி வட்டாரக்குழு மாதாந்திர ஆய்வு கூட்டம் ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் சின்னப்பன், ராஜ், கூடுதல் வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளை படித்த இல்லம் தேடி கல்வி மாணவ மாணவிகளுக்கும் வழிநடத்திய தன்னார்வலர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் கதைகள் வாசிப்பு இயக்கத்தை தொடங்கி நடத்துதல், அரசால் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எண்ணும் எழுத்தும் கற்பித்தல்

நூல்களை தினசரி வாசிக்க பயிற்சி தருதல் மற்றும் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மை கூட்டத்தில் தன்னார்வலர்கள் கட்டாயம் கலந்து கொண்டு கல்வி குழுவுடன் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டு குறித்து கலந்துரையாடி ஆலோசனை பெற்று செல்லுதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தொடர்ச்சியாக இல்லம் தேடி கல்வி மையங்களிலும் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையை தொடக்க வகுப்பு மையங்களில் கடைப்பிடித்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியைகள் ஜெயந்தி, செல்வ சரோஜினி, விசாலாட்சி மற்றும் ஆசிரியர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் விசுவநாதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்