கோபியில் ஐஸ் குச்சிகளால் காந்தி ஓவியம் வரைந்த ஆசிரியர்
ஐஸ் குச்சிகளால் காந்தி ஓவியம்
கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மு.மன்சூர் அலி. இவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி வருவதை முன்னிட்டு காந்தியின் ஓவியத்தை ஐஸ் குச்சிகளால் வடிவமைத்துள்ளார்.
இதற்காக ஆசிரியர் 60 ஐஸ் குச்சிகளை பயன்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு கதர் சோப், நவதானியம், காகித கழிவு, தேங்காய் மற்றும் தட்டச்சு முதலியவற்றில் காந்தியடிகளின் ஓவியத்தை வடிவமைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். ஆசிரியர்கள், மாணவர்கள் காந்தியின் ஓவியத்தை ஆர்வத்துடன் பார்த்தனர்.