கோபியில்ரூ.7½ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

கோபியில் ரூ.7½ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனையானது.

Update: 2023-08-19 21:45 GMT

கடத்தூர்

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி கிலோ ரூ.65-க்கும், நேந்திரன் ரூ.44-க்கும் ஏலம் போனது. இதில் பூவன் ஒரு தார் ரூ.610-க்கும், தேன் வாழை ரூ.760-க்கும், செவ்வாழை ரூ.940-க்கும், ரஸ்தாலி ரூ.690-க்கும், மொந்தன் ரூ.510-க்கும், பச்சை நாடன் ரூ.530-க்கும், ரொபஸ்டா ரூ.460-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்துக்கு வாழைத்தார் விற்பனையானது. இதேபோல் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இதில் சிறிய தேங்காய் 7 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் ரூ.13.80-க்கும் விற்றது. மொத்தம் ரூ.71 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்