செஞ்சியில் தே மு தி க வினர் ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் தே மு தி க வினர் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட 40 பேர் மீது வழக்கு

Update: 2022-06-16 17:33 GMT

செஞ்சி

செஞ்சியை அடுத்த பாலப்பட்டு என்ற ஊரை சேர்ந்தவர் தனலட்சுமி. ஊராட்சி மன்ற தலைவர். இவரது கணவர் அன்பழகன்(வயது 55). சம்பவத்தன்று விழுப்புரத்திலிருந்து பாலப்பட்டுக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த போது பாலப்பட்டில் பஸ்சை நிறுத்தாததால் கண்டக்டர் கொளஞ்சி என்பவருக்கும் அன்பழகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து கண்டக்டர் கொடுத்த புகாரின் பேரில் பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த தே.மு.தி.க. மாவட்ட பொருளாளர் தயாநிதி உள்பட சிலர் மீது அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாநிதியை கைது செய்தனர். இதை கண்டித்தும், கைது செய்தபோது தயாநிதியை தாக்கிய அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அன்பழகன் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரதாஸ், விவசாய அணி விஜயசங்கர், மகளிரணி இருதய மேரி, கேப்டன் மன்றம் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் அருள்முருகன், முத்துசாமி, தேவகுமார், பிரபு, பழனி, ரங்கநாதன், செல்வம், பாலச்சந்தர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி கூட்டுரோட்டில் இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடம் வரை பேரணியாக சென்றதாக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்