உப்பார்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் விவசாயி தர்ணா

உப்பார்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்

Update: 2022-07-09 12:36 GMT

வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது45). விவசாயி. இவர், தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு இன்று வந்தார். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை வைத்து அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வீரபாண்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கருணாநிதி கூறுகையில், உப்பார்பட்டி விலக்கில் தப்புக்குண்டு சாலையில் உள்ள எனது நிலத்தில் தென்னை சாகுபடி செய்துள்ளேன். இந்த நிலையில் அந்த நிலம் புறம்போக்கில் இருப்பதாக கூறி அங்கு உள்ள 35 தென்னை மரங்கள் உள்பட 47 மரங்களை அகற்றுவதாக தெரிவித்தனர். இதனை தடுக்க கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்து தர்ணாவில் ஈடுபட்டோம் என்றார். பின்னர் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்