, ஈரோடு சூரம்பட்டி யில்சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. மாவட்ட குழு சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தத
சி.ஐ.டி.யு. மாவட்ட குழு சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்ட துணைச்செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் கிருஷ்ணன், ஜான்சன் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இததேபோல் தொழிலாளர்கள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) ஈரோடு கிளை சார்பில், ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்குகிளை தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மண்டல செயலாளர் ஜோதிமணி, கிளை செயலாளர் ஸ்ரீதேவி, பொருளாளர் ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.