ஈரோடு சம்பத் நகரில்2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 4 வாலிபர்கள் கைது

4 வாலிபர்கள் கைது

Update: 2023-03-28 21:02 GMT

ஈரோடு அசோகபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவா் நேற்று காலை சம்பத்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்த 2 வாலிபர்கள் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பணம் கேட்டு மிரட்டியது தர்மபுரி மாவட்டம் காளிமங்கலம் கொத்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீபதியின் மகன் சந்தோஷ் மோகன் (23), அதே மாவட்டம் காடகாத்தூரை சேர்ந்த கன்னியப்பனின் மகன் முத்துக்குமார் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் வீரப்பன்சத்திரம் சோழன்நகரை சேர்ந்த சுதாகரன் (46) என்பவர் சூளை டாஸ்மாக் கடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்கள்.

இதுகுறித்து சுதாகரன் கொடுத்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி நாகநாதபுரத்தை சேர்ந்த முருகனின் மகன் அஜித் (24), பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தை சேர்ந்த மாதவாவின் மகன் மஞ்சுநாத் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்