ஈரோடு பெரியசேமூர் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா?

ஈரோடு பெரியசேமூர் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-06-09 19:30 GMT

ஈரோடு 8-வது வார்டுக்குட்பட்டது பெரியசேமூர் பகுதி. இங்கு உள்ள முதலியார் தோட்டம் எல்.வி.ஆர். காலனியில் சாலையோரம் குப்பைகளை சிலர் மூட்டைகளாக கொண்டு வந்து வீசி செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் அங்கு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மதுபிரியர்கள் மதுவை வாங்கி குடித்து விட்டு சில நேரம் குப்பைகளுக்கு தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதன்காரணமாக அங்கு புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்