ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 152 குற்ற வழக்குகளில் 183 பேர் கைது
152 குற்ற வழக்குகளில் 183 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 183 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் பதிவு செய்யப்பட்ட 41 குற்ற வழக்குகளில் 21 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில், 40 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ.32 லட்சத்து 97ஆயிரத்து 920 மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன.மேலும், சட்ட விரோத நடவடிக்கைகளான கஞ்சா விற்றதாக 103 வழக்குகளில் 159 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 59¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாட்டரி விற்றதாக 48 வழக்குகளில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சூதாடியதாக 285 பேர் மீது 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.89 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மாவட்ட போலீஸ் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.