தூத்துக்குடியில் பள்ளங்களில்தேங்கி கிடக்கும் தண்ணீரை டேங்கர் லாரியில் பிடித்து விற்பனை
தூத்துக்குடியில் பள்ளங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரை டேங்கர் லாரியில் பிடித்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள், கடைகள், வீடுகளுக்கு பலர் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு பல கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டின் ஓரத்ததிலுள்ள பள்ளத்தில் குடிநீர் குழாயில் இருந்து கசிந்து தண்ணீர் குட்டை போன்று தேங்கி கிடக்கிறது. அந்த தண்ணீரை சிலர் மோட்டார் மூலம் உறிஞ்சி டேங்கர் லாரிகளில் நிரப்பி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதாரம் இல்லாத தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறதா என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.