தேவதானப்பட்டியில்போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி:பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தேவதானப்பட்டியில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் பொதுமக்கள் அந்த பகுதிக்குள் வர வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.;
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் போலீஸ் துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் அமைந்துள்ளது. இங்கு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பிப்ரவரி 8-ந்தேதி வரை நடக்கிறது. எனவே தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் இந்த பகுதிக்குள் வர வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.