கடலூரில்சரக்கு வாகனத்தில் அடிபட்டு வியாபாரி பலி
கடலூரில் சரக்கு வாகனத்தில் அடிபட்டு வியாபாரி உயிாிழந்தாா்.
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்தவர் வெங்கட ரமணா (வயது 38). இவர் கடலூரில் தங்கியிருந்து ஒட்டடை குச்சி வியாபாரம் செய்து வந்தார். நேற்று மஞ்சக்குப்பம் பகுதியில் வியாபாரம் செய்த வெங்கட ரமணா, மதியம் ஓய்வெடுப்பதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் பின்புறம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இதை கவனிக்காத டிரைவர், சரக்கு வாகனத்தை பின்னோக்கி இயக்கிய போது வெங்கட ரமணா மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர்மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கட ரமணா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான வெங்கடரமணாவுக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.