கடலூரில் ஷேர் ஆட்டோ- அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் காயம்

கடலூரில் ஷேர் ஆட்டோ- அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனா்.;

Update:2023-04-10 00:15 IST

விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் நேற்று காலை வந்தது. அந்த பஸ் டவுன்ஹால் வளைவில் திரும்பியபோது, நேதாஜி தெருவில் இருந்து பாரதிசாலைக்கு வந்த ஷேர்ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து விழுந்தது. இதை பார்த்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர், மற்றொரு பயணி ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். விபத்து நடந்த இடம் பிரதான சாலை என்பதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்