கடலூரில் ரூ.94 லட்சத்தில் குளங்களை சீரமைத்து நடைபாதை அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் சுந்தரி தொடங்கி வைத்தார்

கடலூரில் ரூ.94 லட்சத்தில் குளங்களை சீரமைத்து நடைபாதை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் சுந்தரி தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-09 18:45 GMT

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு ராமசாமி நகரில் உள்ள நல்லான்செட்டிக்குளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் குளத்தை சீரமைத்து, அதனை சுற்றிலும் நடைபாதை அமைக்க ரூ.48 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நல்லான்செட்டிக்குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சுந்தரி கலந்து கொண்டு குளத்தை சீரமைத்து, நடைபாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, இளையராஜா, கவுன்சிலர் ராஜ்மோகன், வார்டு செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கடலூர் கே.கே.நகரில் உள்ள குளத்தை ரூ.45 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கும் பணியை மேயர் தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, கவுன்சிலர்கள் ஆராமுது, சுதா அரங்கநாதன், வக்கீல் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்