கடலூரில் அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-28 18:45 GMT

அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி மத்திய அரசு அறிவிக்கும் அதே நாளில் வழங்கப்பட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஈட்டிய விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செங்கேணி தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். தலைமைச் செயலக சங்க முன்னாள் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

கோரிக்கைகள்

சிறப்பு அழைப்பாளர்களாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத்தலைவர் அமிர்த குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

இதில் முன்னாள் மாநில பொது செயலாளர் கார்மேக வண்ணன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் சையது அபுதாஹிர், மாநில துணை பொது செயலாளர் முருகபாண்டியன், மாநில செயலாளர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட துணை தலைவர்கள் ஆனந்தன், புருஷோத்தமன், ராமலிங்கம், முன்னாள் மாவட்ட பிரசார செயலாளர் வேணுகோபால், முன்னாள் மாநில பிரசார செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்