கூடலூர் பகுதியில் தட்டை பயிர் விளைச்சல் அமோகம்

கூடலூர் பகுதியில் தட்டை பயிர் அமோக விளைச்சல் அடைந்துள்ளது

Update: 2022-11-06 18:45 GMT

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பெருமாள் கோவில் புலம். கழுதைமேடு, சரித்திரவு, பளியன்குடி, கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் தட்டைபயிர், அவரை, கம்பு, மொச்சைப்பயிறுகளை சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் மானாவாரி பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்து உள்ளது. குறிப்பாக தட்டைபயிர் சாகுபடி செய்த நிலங்களில் பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்து உள்ளது. விவசாயிகள் அதிக மகசூல் பெற களை பறித்தும், மருந்துகள் தெளித்தும் பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். தற்போது பூக்கள் பிஞ்சுகள் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் இரவு நேர காவலுக்கு செல்கின்றனர். இருப்பினும் பகல் நேரங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக சென்று தட்டைபயிர்களை சேதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்