கடலூரில், அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடலூரில், அ.தி.மு.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர்கள் எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Update: 2023-06-21 18:45 GMT

கடலூர்

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடலூரில், அ.தி.மு.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர்கள் எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊழல் முறைகேடுகள்

தமிழகத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் கலைமணி, எம்.சி.தாமோதரன், செல்வி.ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அருள், சிவசுப்பிரமணியன், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் வரவேற்றார்.

கண்டன உரை

மாவட்ட செயலாளர்கள் சொரத்தூர் ராஜேந்திரன், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பாண்டியன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசுகையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் உரிய ஆதாரத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்திருக்கிறார்கள். தற்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல் உள்ளது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை, அமைச்சர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடி உள்ளனர். தி.மு.க.விற்கு தற்போது மிகப்பெரிய தலைவலியாக இருப்பவர் செந்தில் பாலாஜி. அமைச்சரவையில் இருந்து அவரை ஏன் பதவி நீக்கம் செய்ய முதல்-அமைச்சர் மறுக்கிறார் என தெரியவில்லை. மேலும் அனைத்து துறைகளிலும் தி.மு.க. அரசு தோல்வி தான் கண்டு வருகிறது. அதுபோல் விபத்தில் இறந்தால் 2 லட்சம் ரூபாயும், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சமும் இந்த ஆட்சியில் கொடுக்கின்றனர். இது அவர்களுக்கே அநியாயமாக தெரியவில்லையா என்றனர்.

இதில் மாநில மீனவரணி தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, மேற்கு மாவட்ட துணை செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் கிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்