சின்னமனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சின்னமனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது
மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.