சிதம்பரத்தில்45 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

சிதம்பரத்தில் 45 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-12-30 18:45 GMT

சிதம்பரம்,

சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் காந்தி சிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் துருவி, துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் சிதம்பரம் சின்ன கடை தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் வெங்கடேஷ் (வயது 23) என்பது தெரியவந்தது.

வாலிபர் கைது

மேலும் இவர், சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்த ஜகபர்அலி (56) என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பள்ளிப்படை பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் மனைவி கலைவாணி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருடியதும், சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் நின்று கொண்டிருந்த அன்னாள் கஸ்பால் என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்ததும், சிதம்பரம் எஸ்.பி. கோவில் தெருவில் சாலையோரம் நின்றிருந்த மாலிக் பாஷா என்பவருடைய மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 45 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்