செட்டியாபத்து ஊராட்சியில்டெங்கு விழிப்புணர்வு முகாம்
செட்டியாபத்து ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செட்டியாபத்து:
செட்டியாபத்து ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாைம உடன்குடி யூனியன் தலைவர் டி.பி.பாலசிங் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், யூனியனில் உள்ள 17 ஊராட்சி மன்ற பகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு செய்து, ஆய்வு செய்து தொற்று நோய் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்புகுடிநீர் வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனி பிரிமின் முன்னிலை வகித்தார். இதில் சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி மற்றும் சுகாதார, மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.