சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறல் : 932 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது;
சென்னை,
ஆங்கில புத்தாண்டு இரவு 12 மணிக்கு தொடங்கியது. 2023ம் ஆண்டை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று தீவிர வாகன சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.