காசோலை மோசடி வழக்கில்2 பேருக்கு 6 மாதம் ஜெயில்

காசோலை மோசடி வழக்கில் 2 பேருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-02-14 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் காசோலை மோசடி வழக்கில் 2 பேருக்கு தலா 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

காசோலை மோசடி வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையை சேர்ந்தவர் எஸ்.சங்கையா (வயது 67). இவரிடம் தினசரி சந்தை சாலையில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் மணிவண்ணன் (36) என்பவர் கடந்த 27.10.2015-ல் ரூ.5 லட்சம் கடனாக வாங்கி உள்ளார்.

இதற்காக 2.11.2015-ல் வங்கி காசோலை வழங்கி உள்ளார். இந்த காசோலையை சங்கையா 4.1.2016-ல் வங்கியில் செலுத்தினார். ஆனால் அதில் பணம் இல்லையென திரும்பியது.

இதையடுத்து சங்கையா, கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.முகமது சாதிக் உசேன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், மணிவண்ணனுக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ஒரு மாதத்துக்கு ரூ.7.50 லட்சமும் வழங்க வேண்டும். இல்லையென்றால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு

கோவில்பட்டி வ.உ.சி. நகர் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ரா.பத்மநாபன் (48). இவரிடம் கோவில்பட்டி வக்கீல் தெருவை சேர்ந்த லெ.சீனிவாச ராகவன் (55) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.1.14 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்துக்கு 8.8.2019-ல் காசோலை வழங்கி உள்ளார். இந்த காசோலை 1.11.2019-ல் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லையென திரும்பியது.

இதையடுத்து பத்மநாபன், கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.முகமது சாதிக் உசேன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், சீனிவாச ராகவனுக்கு 6 மாத சிறை தண்டனையும், ஒரு மாதத்துக்குள் ரூ.1.50 லட்சம் வழங்க வேண்டும். இல்லையென்றால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்