பவானியில் காய்கறி மார்க்கெட் சங்க வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

பவானியில் காய்கறி மார்க்கெட் சங்க வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2023-09-05 01:15 GMT

பவானி

பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் பவானி வட்டார அழுகும் பொருள் காய்கறி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் டி.ஏ.மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பவானி அந்தியூர் பிரிவு அருகே செயல்பட்டு வரும் தினசரி காய்கறி மார்க்கெட்டை பவானி புதிய பஸ் நிலையம் அருகே கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நகராட்சி துணைத்தலைவர் மணி, மாவட்ட செயலாளர் சிவராமன், தலைவர் சந்திரசேகர், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சண்முகம், தனக்கொடி, மாதேஸ்வரன், கார்த்தி, சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்