பவானிசாகரில், மீண்டும் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் மற்றொரு நுழைவு கேட்டை சேதப்படுத்திய யானை

பவானிசாகரில், மீண்டும் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் மற்றொரு நுழைவு கேட்டை யானை சேதப்படுத்தியது.

Update: 2023-05-24 21:13 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அணை முன்புறம் பவானிசாகர் - பண்ணாரி சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளது. கடந்த 21-ந் தேதி இரவு பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கீழ்பவானி வாய்க்காலை கடந்து பவானிசாகர் அணை பூங்கா வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் முன்புற நுழைவு வாயில் கேட்டை இடித்து தள்ளிவிட்டு உள்ளே புகுந்தது. பின்னர் பயிற்சி பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியதோடு அங்கு இருந்த மாமரத்தையும் வேரோடு சாய்த்தது.

இந்த நிலையில் 2-வது நாளாக கடந்த 22-ந் தேதி மீண்டும் அதே பகுதிக்கு வந்த காட்டு யானை பயிற்சி பள்ளியின் மற்றொரு பகுதியில் இருந்த இரும்பு கேட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. காட்டு யானை நடமாட்டம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்