பந்தலூரில், தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
பந்தலூரில், தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பந்தலூர்: பந்தலூர் தொண்டியாளம் பகுதியில் வசித்தவர் சுப்பிரமணி (வயது 52). நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், சர்க்கரை நோயால் பாதித்து, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.