ஆத்தூர் நகர பஞ்சாயத்தில்கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
ஆத்தூர் நகர பஞ்சாயத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதிகளான மூன்றாவது வார்டு முஸ்லிம் தைக்கா தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன், பொறியாளர்கள் இளையராஜா, ஆவடை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.