ஆத்தூர் நகர பஞ்சாயத்தில்ரூ.94 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
ஆத்தூர் நகர பஞ்சாயத்தில் ரூ.94 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 12-வது வார்டு புதுநகர் முதல் பூந்தோட்டம் வரை ரூ. 94 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று காலையில் தொடங்கியது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.கமாலுதீன் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள், பொறியாளர்கள் ஆவுடை பாண்டி, இளையராஜா, ஆத்தூர்குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் சி.பி. செல்வம் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.