அந்தியூரில்குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்; எம்.எல்.ஏ. பங்கேற்பு

அந்தியூரில் நடந்த குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்த கொண்ட ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., கொமராயனூரில் பொதுமக்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார்.

Update: 2023-07-30 21:51 GMT

அந்தியூா்

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிராம கூட்டு குடிநீர் திட்ட வடிகால் வாரிய பொறியாளர் சிவக்குமார், பராமரிப்பு நிர்வாக பொறியாளர் முத்துலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 14 ஊராட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு குடிநீர் வினியோகம் செய்வது குறித்த குறைபாடுகளை கேட்டு அறிந்தனர். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஆனந்த், சிவசங்கரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 'உங்களைத்தேடி உங்கள் எம்.எல்.ஏ.' என்ற திட்டத்தின் கீழ் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையை அடுத்த கொமராயனூர் ஊராட்சி வடிவேலனூர் பகுதியில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்