அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

Update: 2023-07-03 23:54 GMT

அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, வெள்ளித்திருப்பூர் பகுதி விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.100-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.120-க்கும் ஏலம் போனது. பீடா வெற்றிலை ஒரு கட்டு குறைந்தபட்ச விலையாக ரூ.30-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.50-க்கும் ஏலம் போனது. செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு ரூ.17-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்