கூடுதலாக மயான கொட்டகை வேண்டும்

மீனம்பநல்லூர் ஊராட்சியில் கூடுதலாக மயான கொட்டகை வேண்டும்; ஒரே நேரத்தில் இரு சடலங்கள் வருவதால் அவதி

Update: 2023-08-15 18:45 GMT

வேளாங்கண்ணி:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே மேலப்பிடாகை -திருக்குவளை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையிலான பொது மயானம் உள்ளது. இதனை மடப்புரம் மற்றும் மீனம்பநல்லூர் ஆகிய இரு ஊராட்சியை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்குள்ள மயானத்தில் போதிய மயான கொட்டகை வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரண்டு ஊராட்சி மக்களும் பயன்படுத்தும் இந்த மயானத்தில் ஒரே ஒரு மயான கொட்டகை மட்டுமே உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டால் உடலை திறந்த வெளியில் வைத்து எரிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இனி வரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் திறந்தவெளியில் உடல்களை எரியூட்டும்போது மழைபெய்தால் எரிந்து கொண்டிருக்கும் சடலம் அணைந்து விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக மயான கொட்டகை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் உடலை புதைக்கும் இடங்களில் அதிக அளவில் கருவேல மரங்கள் மண்டி இருப்பதால் அதனையும் அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்