தனியார் டைட்டானியம் நிறுவனத்தில்காப்பர் ஒயர் திருடிய டிரைவர் சிக்கினார்
தூத்துக்குடி அருகே தனியார் டைட்டானியம் நிறுவனத்தில் காப்பர் ஒயர் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
தூத்துக்குடி அருகே தனியார் டைட்டானியம் நிறுவனத்தில் காப்பர் ஒயர் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காப்பர் ஒயர் திருட்டு
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் டைட்டானியம் நிறுவனத்தில் காப்பர் ஒயர்களை சிலர் திருடி சென்றனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளரான தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வேல்மகன் ஆத்திமுத்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
டிரைவர் சிக்கினார்
அதன் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் புதுக்கோட்டை அருகே உள்ள கீழதட்டப்பாறை, தெற்கு காலனியை சேர்ந்த பிச்சையா மகன் வேல்முருகன் (27) மற்றும் சிலர் சேர்ந்து காப்பர் ஒயர்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.16 ஆயிரத்து 500 மதிப்புள்ள 11 மீட்டர் காப்பர் ஒயர்களையும் மீட்டனர். மேலும் இந்த திருட்டு வழக்கி்ல் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.