தனியார் தொழிற்சாலையில் ஜெனரேட்டர் திருடிய 3 பேர் கைது

Update: 2023-01-19 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு ரூ.9 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் ஏரல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (வயது 33), முத்தையாபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் குமார் (43), அமிர்தராஜ் மகன் சகாயபூண்டி செல்வன் (29) ஆகிய 3 பேரும் ஜெனரேட்டரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்து, ஜெனரேட்டர் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்