மோட்டார் சைக்கிள் விபத்தில் கோழி கடைக்காரர் பலி

கழுகுமலை அருகே விபத்தில் கோழி கடைக்காரர் பலியானார்.

Update: 2023-07-02 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கோழிக்கடைக்காரர் பரிதாபமாக பலியானார். மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழிக்கடைக்காரர்

.கழுகுமலை அருகே உள்ள தெற்கு தெரு ஜமீன் தேவர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 52). இவர் கழுகுமலை காளவாசல் பஸ் ஸ்டாப் அருகே கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாரித்தாய் (47) என்ற மனைவியும், ஜெகதீஸ்வரன் (14), சரவணன் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கருப்பசாமி நேற்று கடையில் வேலையை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் ஜமீன் தேவர் குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சாவு

கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி ஊருக்கு அருகே செல்லும் போது திடீரென பின்னால் வந்த வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதை ஓட்டிச்சென்ற டிரைவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்