நிலத்தகராறில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தட்டப்பாறை அருகே நிலத்தகராறில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-01-01 18:45 GMT

தட்டப்பாறை:

தட்டப்பாறை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 48). இவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.

இதனால் நேற்று முன்தினம் கருப்பசாமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த குருசாமியின் மனைவி செல்வி (44), அவரது மகன்கள் குருசாமி என்ற சக்தி (24), சிவகுருநாதன், உறவினர்கள் மாரிமுத்து என்ற பூபதி (25), கொத்தாளமுத்து (48) ஆகியோர் சேர்ந்து கருப்பசாமியிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றார்களாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து என்ற பூபதி, செல்வி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்