திருமணமான 4 மாதத்தில்புதுப்பெண் மாயம்

கயத்தாறு அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயமானார்.

Update: 2023-03-17 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைகுளம் கீழ காலனியை சேர்ந்தவ மூக்கன் மகள் தேவயானி (வயது 20). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜ்(25) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தனி வீட்டில் வசித்து வந்தனர். ராஜ் கூலி வேலைக்கும், தேவயானி மில் ஒன்றிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற தேவயானி வீடு திரும்பவில்லை. கணவரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் ேதடியும் அவரை பற்றிய விபரம் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தேவயானியை தேடிவருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்