தமிழகத்தில் 15 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் 15 இடங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தி மற்றும் ஈரோட்டில் 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவான இடங்கள்;
* கரூர் பரமத்தி - 110 டிகிரி பாரன்ஹீட்
* ஈரோடு - 110 டிகிரி பாரன்ஹீட்
* திருச்சி - 109 டிகிரி பாரன்ஹீட்
* வேலூர் - 109 டிகிரி பாரன்ஹீட்
* மதுரை விமான நிலையம் - 108 டிகிரி பாரன்ஹீட்
* திருத்தணி - 107 டிகிரி பாரன்ஹீட்
* திருப்பத்தூர் - 107 டிகிரி பாரன்ஹீட்
* பாளையங்கோட்டை - 106 டிகிரி பாரன்ஹீட்
* மதுரை நகரம் - 105 டிகிரி பாரன்ஹீட்
* சேலம் - 105 டிகிரி பாரன்ஹீட்
* தருமபுரி - 104 டிகிரி பாரன்ஹீட்
* தஞ்சாவூர் - 104 டிகிரி பாரன்ஹீட்
* மீனம்பாக்கம் - 102 டிகிரி பாரன்ஹீட்
* கோவை - 102 டிகிரி பாரன்ஹீட்
* நாகப்பட்டினம் - 100 டிகிரி பாரன்ஹீட்