உடன்குடி உள்ளிட்ட 10 இடங்களில் இந்து முன்னணி தெருமுனை பிரசாரம்
உடன்குடி உள்ளிட்ட 10 இடங்களில் இந்து முன்னணி தெருமுனை பிரசாரம் நடந்தது.
உடன்குடி:
தமிழக அரசு இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும், கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் உடன்குடி வைத்தியங்கபுரம், சந்தையடியூர், காலன்குடியிருப்பு, பெருமாள்புரம், சிவலூர் உட்பட 10 இடங்களில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் பங்கேற்று பேசினார். இந்த கூட்டங்களில் உடன்குடி ஒன்றிய தலைவர் செந்தில்செல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் சுடலைமுத்து, ஒன்றிய பொறுப்பாளர் பட்டு, ஒன்றிய செயலர் முத்துகுமார், நகர பொறுப்பாளர் சதீஷ்கிருஷ்ணன், நகர தலைவர் சித்திரைபெருமாள், நகர செயலாளர் தங்கராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.