குடும்ப பிரச்சினையில் விபரீதம்திருமணமான 1½ ஆண்டுகளில்இளம்பெண் தீக்குளிப்பு

குடும்ப பிரச்சினையில் திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2023-01-20 19:52 GMT

சேலம்,

இளம்பெண்

சேலம் அம்மாபேட்டை வித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், வெள்ளிப்பட்டறை தொழிலாளி. அவருடைய மனைவி லட்சுமி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையேஅடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட லட்சுமி நேற்று வீட்டில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் அலறி துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு லட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், லட்சுமியின் தாய் இறந்ததை அடுத்து அவரது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். இதனால் லட்சுமியுடன் அவரது தங்கை மகேஸ்வரியும் வசித்து வருகிறார். அவரை ஒரு விடுதியில் சேர்த்து விட சதீஷ்குமார் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு லட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் லட்சுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்