கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வாகனத்தை உரிமம் இல்லாமல் இயக்கினால் பறிமுதல்: ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வாகனத்தை உரிமம் இல்லாமல் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-04-12 18:37 GMT

குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின் படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும், நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.கழிவுநீர் தொட்டியை (செப்டிக் டேங்க்)சுத்தம் செய்யும் வாகனம் வைத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும், உரிமை இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் வழக்குப்பதிவு செய்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை குளித்தலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்