சாராயம் காய்ச்சியவர் சிறையில் அடைப்பு

சாராயம் காய்ச்சியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-09-02 18:53 GMT

ஆலங்குடி அருகே சாராய ஊறல் போட்டு இருப்பதாக ஆலங்குடி மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குடி அருகே கருக்காக்குறிச்சி தெற்கு தெரு பகுதியில் முத்துசாமி மகன் வீரையா (வயது 45) என்பவர் சோள தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 500 லிட்டர் ஊறல் வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து வீரையாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்