நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை
நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலப்பாளையம் சிவராஜபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ராஜா செல்வின் (வயது 23). இவரிடம் போலீசாரால் 1 வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. ஆனால் அதன் பிறகும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனவே நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரசிதா, நெல்லை மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய அவர், பிணையை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதால் ராஜா செல்வினை மீதமுள்ள 3 மாதம் 10 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.