மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

சங்கராபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.

Update: 2023-08-29 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அம்பேத்கர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சாகை வார்த்தல் விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து திரளான பக்தர்கள் கூழ்குடங்கள் மற்றும் பால் குடங்களை தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு கூழ்படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு கூழ்பகிர்ந்து வழங்கப்பட்டது. இதில் சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்