அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.;

Update:2022-09-04 10:53 IST

சென்னை,

பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைசார்ந்த அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த மற்றும்உபயோகமற்ற மரச் சாமான்கள், இரும்பு பொருட்கள் நீண்டகாலமாக வகுப்பறைகள் மற்றும் வெளிப்புறங்களில் காணப்படுகின்றன. மறுபுறம் பள்ளிகளில் இடப் பற்றாக்குறை காரணமாக பணியாளர்கள், மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் பழுதடைந்த மரச்சாமான்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அகற்றவேண்டியது மிகவும் அவசியமாகிறது.

எனவே, அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். அத்தகைய பயன்பாடற்றபொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து, அந்தத் தொகையை உரிய அரசு வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்