சமுதாய கூடத்தை பராமரிக்க உடனடி நடவடிக்கை

சமுதாய கூடத்தை பராமரிக்க உடனடி நடவடிக்கை

Update: 2022-11-21 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். பொருளாளர் மரியம்மா, கூடுதல் செயலாளர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது சலீம் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தை உடனடியாக பராமரிப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். கோத்தகிரி அரசு மருத்துவமனை சித்தா பிரிவிற்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும். கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு வாகனம் நிறுத்த இடையூறாக வைக்கப்பட்டுள்ள பறிமுதலான மரக்கட்டைகளை அகற்ற வேண்டும், கோத்தகிரி நகரின் முக்கிய சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற பழைய வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் இணை செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்