இருளர் பாதுகாப்பு சங்க பெண் நிர்வாகி கடத்தல்?
செஞ்சி அருகே இருளர் பாதுகாப்பு சங்க பெண் நிர்வாகி கடத்தி செல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செஞ்சி
செஞ்சி தாலுகா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி பிரியா(வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருளர் பாதுகாப்பு சங்கத்தில் பொறுப்பில் இருந்து வந்த பிரியா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணாததால் இதுபற்றி நல்லாண் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் பிாியாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், அந்த நபர் பிரியாவை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா கடத்தி செல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.