ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணி : 236 பேரின் பணி நியமன உத்தரவு ரத்து...!

ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-04 03:20 GMT

மதுரை,

ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கு கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் எழுத்து தேர்வு , நேர்காணல் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்கு தகுதியில்லாத நபர்களுக்கு பணி வழங்கியது ,எழுத்துத் தேர்வு வினாத்தாள் வெளியானது , தகுதியானவர்களை நேர்காணல் அழைக்காதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தலைமையிலான குழு இதுகுறித்துக் புகாரை விசாரித்து வந்த நிலையில், அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்