ஸ்ரீரங்கம் கோவிலைச்சுற்றி விதிமீறல் கட்டிடங்கள்: 3 அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்ரீரங்கம் கோவிலைச்சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் 3 அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-11-28 20:41 GMT


ஸ்ரீரங்கம் கோவிலைச்சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் 3 அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் கோவில்

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என விதிமுறை உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் இந்த அரசாணையை மீறி, சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோவிலில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டு உள்ளன. இதைத்தவிர பல்வேறு வீதிகளிலும் வீடுகள், கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளன. இங்குள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கு தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

நேரில் ஆஜர்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், விதிகளை மீறி கட்டிடம் கட்டும் வரை நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்க திருச்சி மாநகராட்சி கமிஷனர், திருச்சி நகர திட்டமிடல் இணை இயக்குனர், ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்